Digital Time and Date

Welcome Note

Saturday, December 15, 2012

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே. ஏன்?

இஸ்லாம் அல்லாத மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லையே. ஏன்?.

டாக்டர் ஜாகிர் நாயக் அவர்களிடம் முஸ்லிம் அல்லாதவர்கள் ஆங்கிலத்தில் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதிலினை தமிழாக்கம் செய்து தந்திருக்கிறேன். படியுங்கள். பரப்புங்கள். அல்லாஹ் நம் அனைவருக்கும் நல்லருள் புரிவான்

பதில்:

மாற்று மதத்தவர்கள் மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல அனுமதிக்கப்படுவது இல்லை என்பது
உண்மை. அடியிற் காணும் விளக்கங்கள் மேற்படி தடையைப் பற்றி தெளிவாக்க உதவும்:
1. நாட்டிலுள்ள எல்லா குடிமக்களும் தடை செய்யப்பட்ட இடங்களுக்குச் செல்ல முடியாது.
நான் ஒரு இந்தியக் குடிமகன். ஆயினும் ராணுவ கேந்திரங்கள் போன்ற பாதுகாக்கப்பட்ட
பகுதிகளுக்குள் செல்ல எனக்கு அனுமதியில்லை. ராணுவத்தில் பணிபுரிபவர்கள் - மற்றும்
ராணுவத்தோடு தொடர்பு உடையவர்கள் மாத்திரம்தான் ராணுவ கேந்திரங்கள் போன்ற
பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குள் செல்ல அனுமதி உண்டு. இதுபோல- ஒவ்வொரு நாட்டிலும் -
அந்த நாட்டின் சாதாரண குடிமக்கள் செல்ல முடியாதவாறு பாதுகாக்கப்பட்ட பகுதிகள் சில
இருக்கின்றன. அது போல இஸ்லாம் உலகத்திற்கும் - உலகத்தில் உள்ள மக்களுக்கும்
பொதுவான மார்க்கமாக இருந்தாலும் - இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருப்பது -
இரண்டு புனித நகரங்களான மக்காவும் - மதினாவுமாகும். இஸ்லாத்தின் பாதுகாக்கப்பட்ட
பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல
அனுமதியுள்ளவர்கள் இஸ்லாமியர்கள் மாத்திரமே.

பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்குச் செல்ல தடை செய்திருப்பதை நாட்டின் சாதாரண குடிமகன்
எதிர்ப்பது சரியானது அல்ல. அதே போன்றுதான் முஸ்லிம் அல்லாதவர்கள் இஸ்லாத்தின்
பாதுகாக்கப்பட்ட பகுதியாக இருக்கும் இந்த - இரண்டு புனித நகரங்களான மக்காவுக்கும்
மதினாவுக்கும் செல்ல அனுமதி மறுக்கப்பட்டிருப்பது குறித்து எதிர்ப்பு தெரிவிப்பதும் சரியானது
அல்ல.

2. மக்காவுக்கும் மதினாவுக்கும் செல்ல அனுமதிக்கும் ''விஷா'

ஒருவர் வெளிநாட்டிற்கு செல்ல வேண்டுமெனில் அந்நாட்டிற்கு செல்வதற்காக ''விஷா' அதாவது
அனுமதி பெற வேண்டும். ஒவ்வொரு நாடும் தமது நாட்டிற்கு வர அனுமதி பெற வேண்டுமெனில்,
தமக்கென வித்தியாசமான சட்டங்களையும், விதிகளையும், தேவைகளையும் வகுத்துள்ளன.
மேற்படி வகுக்கப்பட்டுள்ள சட்டங்களுக்கும் - விதிகளுக்கும், தேவைகளுக்கும் உட்படாதவர்களுக்கு
தம் நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதில்லை.

இவ்வாறு தம் நாட்டிற்குள் வர அனுமதி அளிப்பதில் கடுமையான சட்டங்களையும், விதிகளையும்,
தேவைகளையும் வகுத்துள்ள நாடுகளில் அமெரிக்காவும் ஒன்று. குறிப்பாக மூன்றாம் தர நாடுகளில்
உள்ள மக்களுக்கு அனுமதி அளிப்பதற்கென கடுமையான சட்ட திட்டங்களை வகுத்துள்ளது.
மூன்றாந்தர நாடுகளில் உள்ள மக்கள் அமெரிக்கா செல்ல விஷா பெற வேண்டுமெனில் ஏராளமான
தேவைகளையும் - நிபந்தனைகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும்.

கடந்த முறை நான் சிங்கப்பூருக்கு சென்றபோது, போதைப்பொருள் கடத்துவோருக்கு மரண
தண்டனை என சிங்கப்பூர் இமிக்ரேஷன் படிவத்தில் எழுதப்பட்டிருந்தது. நான் சிங்கப்பூர் செல்ல
வேண்டும் எனில் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு உட்பட்டே ஆக வேண்டும். மரண தண்டனை
காட்டுமிராண்டித்தனம் என நான் வாதாட முடியாது. நான் சிங்கப்பூரின் சட்ட திட்டங்களுக்கு
உட்படுவேன் என்றால் மாத்திரமே, என்னை சிங்கப்பூர் செல்ல அனுமதிப்பார்கள்.

இஸ்லாத்தின் புனித நகரங்களான மக்காவிற்கும் - மதினாவிற்கும் செல்ல விரும்பும் எந்த
மனிதருக்கும் -இருக்க வேண்டிய ஒரேயொரு முக்கியத் தகுதி என்னவெனில் - தன் உதடுகளால்
மொழிந்து, உள்ளத்தால் ஏற்றுக்கொள்ளக் கூடிய

''லா இலாஹ இல்லல்லாஹ் - முஹம்மதுர் ரஸுலுல்லாஹ்'
'வணக்கத்திற்குரிய நாயன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.
முஹம்மது நபி அவனது தூதராவார்' - என்பதுதான்.

வரலாற்றில் இன்று

டிசம்பர் 15
1256 - மொங்கோலியப் பேரரசன் குலாகு கான் அலாமுட் (இன்றைய ஈரானில்) என்ற இடத்தைக் கைப்பற்றி அழித்தான்.

1799 - முற்றிலும் உள்ளூர் மக்களைக்கொண்ட முதலாவது ஆங்கில செமினறி கொழும்பில் அமைக்கப்பட்டது.

1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்புப் படைகளை டென்னசியில் முற்றாகத் தோற்கடித்தனர்.

1891 - ஜேம்ஸ் நெய்ஸ்மித் கூடைப்பந்தாட்டத்தை முதன் முதலாக அறிமுகப்படுத்தினார்.

1905 - அலெக்சாண்டர் புஷ்கினின் கலாசாரப் பழமைகளைப் பேணும் பொருட்டு சென் பீட்டர்ஸ்பேர்க்கில் புஷ்கின் மாளிகை அமைக்கப்பட்டது.

1955 - உலகின் எட்டாவது அதிசயமான ஓல்சன் கடிகாரம் டென் மார்க் தலைநகரான கோப்பன் ஹேகனில் ஓட விடப்பட்டது.

1960 - மன்னர் மகேந்திரா நேபாளத்தின் அரசைக் கலைத்து நாட்டின் முழு அதிகாரத்தையும் தனதாக்கிக் கொண்டார்.

1965 - த சவுண்ட் ஒஃப் மியூசிக் திரைப்படம் வெளியானது.

1970 - சோவியத் ஒன்றியத்தின் வெனேரா 7 விண்கலம் வெள்ளி கோளின் மேற்பரப்பில் மெதுவாக இறங்கிய முதலாவது கலமாகும். இதுவே வேறொரு கோளின் மீது இறங்கிய முதலாவது விண்கலமாகும்.

1978 - மக்கள் சீனக் குடியரசை அங்கீகரிப்பதாகவும் தாய்வானுடனான உறவுகளைத் துண்டிப்பதாகவும் அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர் அறிவித்தார்.

1991 - இந்தியத் திரையுலகில் இமயம் என்று வருணிக்கப்படும் சத்யஜித்ரேக்கு ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது
1994 - இணைய உலாவி நெட்ஸ்கேப் நவிகேட்டர் 1.0 வெளியிடப்பட்டது
1997 - தென் கிழக்கு ஆசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்கும் உடன்படிக்கை பாங்கொக்கில் கையெழுத்திடப்பட்டது.

2001 - பீசாவின் சாயும் கோபுரம் 11 ஆண்டுகளின் பின்னர் மீண்டும் திறக்கப்பட்டது.

2006 - கிழக்குப் பல்கலைக்கழக உபவேந்தர் கலாநிதி சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கொழும்பில் இனம் தெரியாத ஆயுததாரிகளினால் கடத்தப்பட்டார்.

Friday, December 14, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர்  14

இந்தியா - எரிபொருள் சேமிப்பு நாள்

உலகக் குழந்தைகள் தொடர்பு நாள்

1287 - நெதர்லாந்தில் இடம்பெற்ற பெரும் வெள்ளத்தினால் சூடர் சே கடல் தடுப்பு சுவர் இடிந்ததில் 50,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.


1542 - இளவரசி மேரி ஸ்டுவேர்ட் முதலாம் மேரி என்ற பெயரில் ஸ்கொட்லாந்தின் அரசியானாள்.

1819 - அலபாமா ஐக்கிய அமெரிக்காவின் 22வது மாநிலமானது.

1899 - யாழ்ப்பாணம் பொது மருத்துவமனையை தனியாரிடம் இருந்து இலங்கை அரசாங்கம் பொறுப்பெடுத்துக் கொண்டது.

1900 - மாக்ஸ் பிளாங்க் தனது கரும்பொருள் கதிர்வீச்சு பற்றிய கொள்கையை நிறுவினார்.

1903 - ரைட் சகோதரர்கள் தமது வான்வெளிப் பயணத்தை முதற்தடவையாகச் சோதித்தனர்.

1911 - ரோல்ட் அமுண்ட்சென் தலைமையிலான 5 பேரடங்கிய குழு தென் முனையை அடைந்த முதலாவது மனிதர் என்ற பெயரைப் பெற்றனர்.

1918 - பின்லாந்தின் மன்னனாக ஜெர்மனியின் இளவரசன் பிறீட்ரிக் கார்ல் வொன் ஹெஸ்சென் தெரிவுசெய்யப்பட்டான்.

1939 - நாடுகளின் கூட்டமைப்பில் இருந்து சோவியத் ஒன்றியம் வெளியேற்றப்பட்டது.

1941 - உக்ரேனின் கார்க்கிவ் நகரின் நாசி ஜேர்மனியத் தளபதி யூதர்கள் அனைவரும் நகரை விட்டு 2 நாட்களில் வெளியேற உத்தரவிட்டான். அடுத்த இரு நாட்களில் சுமார் 15,000 யூதர்கள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பான் தாய்லாந்துடன் கூட்டு ஒப்பந்தம் செய்து கொண்டது.

1946 - ஐநாவின் தலைமையகத்தை நியூயோர்க் நகரில் அமைக்க முடிவாகியது.

1962 - நாசாவின் மரைனர் 2 விண்கலம் வெள்ளி கோளை அண்மித்தது. இதுவே வெள்ளியை அண்மித்த முதலாவது விண்கலமாகும்.

1967 - DNA எனப்படும் மரபணுக்கூறை முதல் முறையாக சோதனைக் குழாயில் உருவாக்கிக் காட்டினர் விஞ்ஞானிகள்
1972 - அப்பல்லோ 17: யூஜின் சேர்னன் சந்திரனில் நடந்த கடைசி மனிதர் ஆனார்.

2003 - சதாம் உசேன் கைப்பற்றப்பட்ட செய்தியை ஐக்கிய அமெரிக்காவின் அதிபர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ் அதிகாரபூர்வமாக அறிவித்தார்.

2003 - பாகிஸ்தான் அதிபர் பெர்வேஸ் முஷாரப் கொலை முயற்சி ஒன்றிலிருந்து உயிர் தப்பினார்.

2004 - தென் பிரான்சில் வான் வீதி என அழைக்கப்படும் மில்லோ என்ற உலகின் மிகு உயர் பாலம் திறக்கப்பட்டது

Thursday, December 13, 2012

60 வயதிலும் நிமிரலாம்.. குனியலாம்!

''ச்சே! வயசானதும் நாம நாமாளாகவே இருக்க முடியலை... கொஞ்ச நேரம் சேர்ந்தாற்போல நிற்க முடியலை, மாடிப்படி ஏறி இறங்க முடியலை... எவ்வளவு சிரமப்பட வேண்டியிருக்கு!'' - இப்படி நம் வீடுகளில் தாத்தா, பாட்டிகள் புலம்புவதைப் பார்த்து இருப்போம். அவர்களின் சிரமங்களைப் பார்த்து நம் மனமும் சிரமத்துக்கு உள்ளாகும். பெரியவர்களின் இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் உடற்பயிற்சிகளில் தீர்வு இருக்கிறது என்று சொல்கிறார்கள் மருத்துவர்கள். 'வயதானவர்களால் உடற்பயிற்சிகள் செய்ய முடியாதே?’ என்று சிலர் கேட்கலாம்! ''அப்படி எல்லாம் எதுவும் இல்லை. வயதானவர்களுக்கு என்றே சில பிரத்யேகமான உடற்பயிற்சிகள் இருக்கின்றன!'' என நம்பிக்கை வார்க்கும் பயிற்சியாளர் மாரியப்பன், அவற்றை எப்படிச் செய்ய வேண்டும் என்று ஒரு செயல்முறை விளக்கமும் கொடுத்தார்.



''உடற்பயிற்சி செய்ய வேண்டிய வயதானவர்களை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம். ஒரு வகையினர் இயல்பான நிலையில் பயிற்சிக்கு வருபவர்கள். மற்றொரு வகையினர் உடலின் சில பாகங்களில் பாதிப்பு ஏற்பட்டு, அதைக் குணப்படுத்தும் நோக்கில் பயிற்சி எடுத்துக்கொள்ள வருபவர்கள். எந்த வகையினராக இருந்தாலும் பயிற்சிகளைத் தொடங்கும் முன்னே அவர்களை டாக்டர் மற்றும் ஃபிசியோதெரபிஸ்ட்டிடம் அனுப்பி அவர்களின் உடலை முழுவதும் பரிசோதனை செய்தபின் அவர்களது வழிகாட்டுதல்பேரில்தான் பயிற்சிகளைத் அளிக்கத் தொடங்க வேண்டும்.

முதலில் எளிய வகை வார்ம் - அப் பயிற்சிகளை எடுத்துக்கொள்ள வேண்டும் அப்போதுதான் ரத்த ஓட்டம் சீராகி, பயிற்சிக்காகத் தசைநார்கள் தயாராகும். அதன் பின்னர் சில 'ஸ்ட்ரெட்ச்’ வகைப் பயிற்சிகளைச் செய்ய வேண்டும். மேலும் இவ்வகைப் பயிற்சிகளை மேற்கொள்ளும்போது வலி ஏற்பட்டால் உடனடியாக நிறுத்திவிடுவது நல்லது.

கால்ஃப் முறை (Calf stretch)

முதலில் ஒரு சுவரின் அருகில் நேராக நிற்கவும்.

ஒரு காலை நன்றாகத் தரையில் ஊன்றிக் கொண்டு இன்னொரு காலைப் படத்தில் காட்டி உள்ளபடி சுவற்றில் வைக்கவும்.

சுவரைத் தொட்டபடி இருக்கும் காலுக்கு மெதுவாக அழுத்தம் கொடுத்துப் 10 முதல் 20 வினாடிகள் வரை நிற்கவும்.

பிறகு கால்களை மாற்றி இதேபோல மீண்டும் செய்யவும்.

இதுபோன்று ஒவ்வொரு முறையும் மூன்று முறை என ஒரு நாளைக்கு நான்கு வேளை செய்ய வேண்டும்.

பலன்கள்

ரத்த ஓட்டம் சீராகும், பயணங்களின் போது கணுக்கால் மற்றும் பாதங்களைச் சுற்றி ஏற்படும் வீக்கம் குறையும். குதிக்கால் வலி நீங்கும்.



ஹாம்ஸ்டிரிங் (Hamstring)

தரையில் கால்களை நீட்டியபடி நேராக உட்காரவும்.

முடிந்தவரை கால் முட்டிகளை மடக்காமல் அதே சமயம் முதுகையும் வளைத்து, கால் கட்டை விரல்களைத் தொடுவதற்கு முயற்சிக்கவும்.

திரும்பப் பழைய நிலைக்கு வந்து மீண்டும் இதேபோல செய்யவும்.

பலன்கள்

முதுகுவலி நீங்கும். முதுகுப் பகுதியின் வளைந்துக் கொடுக்கும் தன்மை அதிகமாகும்.

ஐ.டி பேன்ட் ஸ்ட்ரெட்ச் (IT band stretch)

நேராக நிற்கவும்.

கால் முட்டியை நோக்கிக் கைகளை நீட்டிய நிலையில் மெதுவாகக் குனிந்து நிற்கவும்.

அப்படியே 45 டிகிரி கோணத்தில் படத்தில்காட்டி உள்ளபடி வலது பக்கமாக மெதுவாக உடலை மட்டும் திருப்பவும்.

இந்த நிலையில் 15 வினாடிகள் நிற்கவும்.

மெதுவாகப் பழைய நிலைக்குத் திரும்பவும்.

இப்போது இந்தப் பயிற்சியை இடது பக்கமாக உடலைத் திருப்பிச் செய்யவும்.

இதுபோன்று ஒவ்வொரு முறையும் மூன்று முறை என ஒரு நாளைக்கு நான்கு வேளை செய்ய வேண்டும்.

பலன்கள்

மூட்டுப் பகுதியில் இருக்கும் வலி குணமாகும்.



குவாட் ஸ்ட்ரெட்ச் (Quad stretch)

நேராக நிற்கவும்.

படத்தில் காட்டி இருப்பது போல வலது காலை வலது கையால் மெதுவாக மடக்கிப் பிடித்துக்கொள்ளவும்.

இவ்வாறு 15 வினாடிகள் நிற்க வேண்டும்.

திரும்ப இயல்பு நிலைக்கு வந்து மற்றொரு காலிலும் செய்ய வேண்டும்.

உடலைச் சிரமப்படுத்தாமல் இப்படி எத்தனை முறை முடிகிறதோ அத்தனை முறை செய்யலாம்.

எந்தவிதமான பிடிமானமும் இல்லாமல் இந்தப் பயிற்சியைச் செய்யச் சிரமமாக இருந்தால் இன்னொரு கையால் பக்கத்தில் இருக்கும் சுவரைப் பிடித்துக் கொள்ளலாம்.

பலன்கள்

நீண்ட நேரமாக உட்கார்ந்து இருந்ததாலும் நடந்ததாலும் ஏற்படும் மூட்டு வலி குறையும். சிரமப்படாமல் உட்கார்ந்து எழுந்திரிக்கவும், மாடிப்படிகள் ஏறி இறங்கவும் உதவும்.

க்லூட்டஸ் ஸ்டிரெட்ச் (Glutes stretch)

கால்களை நீட்டியபடி நேராக அமர்ந்துகொள்ளவும்.

முடிந்தவரை முதுகை நேராக வைத்துக்கொண்டு படத்தில் காட்டி உள்ளபடி இடது காலை வலது காலுக்கு மறுபக்கமாக வைத்துக்கொள்ளவும்.

பிறகு கைகளைக் கோர்த்துக்கொண்டு உடலை வலது பக்கமாக சிறிது திருப்பவும்.

பிறகு மெள்ளப் பழைய நிலைக்குத் திரும்பி மறு பக்கத்துக்கும் இந்தப் பயிற்சியைச் செய்ய வேண்டும்.

இதுபோன்று ஒவ்வொரு முறையும் மூன்று முறை என ஒரு நாளைக்கு நான்கு வேளை செய்ய வேண்டும்.

பலன்கள்

முதுகுப்பகுதி பலம் பெறும்.

சூப்பர்மேன் நிலை - வலுப்படுத்தும் பயிற்சி (Superman position)

முதலில் குப்புறப் படுத்துக்கொள்ளவும்.

படத்தில் காட்டி உள்ளபடி இடது காலை உயர்த்தி, அதேசமயம் வலது கையை நீட்டியபடி உயர்த்தவும்.

பிறகு மீண்டும் பழைய நிலைக்குத் திரும்பி காலையும் கையையும் மாற்றி இதேபோலச் செய்ய வேண்டும்.

பலன்கள்

ரத்த ஓட்டம் சீராகும். முதுகுத்தண்டு பலம் பெறும்.

இங்கு குறிப்பிட்டு இருக்கும் பயிற்சிகள் அனைத்தையும் உரிய மருத்துவ ஆலோசனைகள் பெற்றுதான் மேற்கொள்ள வேண்டும்.

வரலாற்றில் இன்று

டிசம்பர்  13


1577 - சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.

1642 - டச்சுக் கடலோடியான அபெல் டாஸ்மான் நியூசிலாந்தை கண்டுபிடித்தார்.

1884 - காசு போட்டு எடை பார்க்கும் எந்திரத்தைத் தயாரித்து அதற்கான காப்புரிமத்தை பெற்றார் பெர்சி எவர்ரைட்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன.

1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் ஜெர்மனியின் "கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.

1949 - இஸ்ரேலின் சட்டசபை நாட்டின் தலைநகரை ஜெருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.

1959 - மக்காரியோஸ் சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதியானார்.

1972 - அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20ம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.

1974 - மோல்ட்டா குடியரசானது.

1981 - போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.

1989 - உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம் துவக்கம்.

1996 - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.

2001 - இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.

2003 - முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

2004 - முன்னாள் சிலி சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினோச்சே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.

2006 - பாய்ஜீ என்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.

வரலாற்றில் இன்று

டிசம்பர்  12

தமிழ்நாடு மார்க்சிய லெனினியக் கட்சி துவக்கம்

627 - பைசண்டைன் பேரரசு இராணுவம் ஹெராகிளியஸ் தலைமையில் பாரசீகப் படைகளைத் தோற்கடித்தன.

1098 - சிரியாவின் மாரட்-அல்-நூமன் நகரை பாப்பரசர் இரண்டாம் ஏர்பனின் படைகள் தாக்கி 20,000 பொதுமக்களைக் கொன்றனர்.

1787 - பென்சில்வேனியா ஐக்கிய அமெரிக்காவின் இரண்டாவது மாநிலமானது

1800 - அமெரிக்காவின் தலைநகராகத் தேர்ந்தெடுக்கப்பட்டது Washington.

1812 - ரஷ்யாவின் மீதான பிரெஞ்சுப் படையெடுப்பு முடிவடைந்தது.

1817 - நியூ சவுத் வேல்ஸ் ஆளுநர் லக்லான் மக்குவாரி ஆஸ்திரேலியா என்ற பெயரை காலனித்துவ அரசுக்கு பரிந்துரைத்தார்.

1862 - யாசூ ஆற்றில் ஐக்கிய அமெரிக்காவின் யூ.எஸ்.எஸ்.கைரோ என்ற ஆயுதம் தாங்கிக் கப்பல் கண்ணிவெடியில் சிக்கி மூழ்கியது.

1871 - யாழ்ப்பாணத்தில் முழுமையான சூரிய கிரகணம் அவதானிக்கப்பட்டது. இங்கிலாந்தின் வானியலாளர் நோர்மன் லொக்கியர் தலைமையில் ஒரு அறிவியலாளர் குழு இதனைப் பார்வையிடுவதற்கு யாழ்ப்பாணம் வந்தது.

1896 - வானொலியின் செயல்முறையை விளக்கிக் காட்டினார் வானொலியின் தந்தை என்று போற்றப்படும் மார்க்கோனி.

1901 - அட்லாண்டிக் கடலூடாக முதன் முதலாக இங்கிலாந்தில் இருந்து கனடாவின் நியூபின்லாந்தில் வானொலி சமிக்கைகளை மார்க்கோனி பெற்றார்.

1911 - இந்தியாவின் தலைநகரம் கல்கத்தாவிலிருந்து டெல்லிக்கு மாற்றப்பட்டது.

1923 - இத்தாலியில் போ ஆற்றின் அணைக்கட்டு வெடித்ததில் 600 பேர் கொல்லப்பட்டனர்.

1939 - குளிர்காலப் போர்: பின்லாந்துப் படைகள் சோவியத் படைகளை டொல்வஜார்வி என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன.

1941 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானியா பல்கேரியாவின் மீதும், ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீதும், இந்தியா, ஜப்பான் மீதும் போரை அறிவித்தன.

1941 - அமெரிக்கப் போர்க் கப்பல் வேக் தீவுக் கரைக்கப்பால் நான்கு ஜப்பானியக் கப்பல்களைத் தாக்கி மூழகடித்தது.

1941 - யூதர்களை வெளியேற்றும் திட்டத்தை அடொல்ஃப் ஹிட்லர் அறிவித்தார்.

1948 - மலேசியாவில் நிலை கொண்டிருந்த ஸ்கொட்லாந்துப் படையைச் சேர்ந்த 14 பேர் பட்டாங் காலி என்ற இடத்தில் உள்ளூர்ப் பொதுமக்கள் 24 பேரைக் கொன்று கிராமத்தைத் தீ வைத்து எரித்தனர்.

1963 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து கென்யா விடுதலை பெற்றது.

1979 - ரொடீசியாவின் பெயர் சிம்பாப்வேயாக மாற்றப்பட்டது.

1984 - மவுரித்தேனியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் அதிபர் முகமது கவுனா ஹைடாலா பதவி அகற்றப்பட்டு மாவோவுயா சிட்'அஹமது டாயா புதிய அதிபரானார்.

1991 - ரஷ்யா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலை பெற்றது.

1997 - களுத்துறை சிறைச்சாலைப் படுகொலைகள்: இலங்கையின் களுத்துறை சிறைச்சாலையில் மூன்று தமிழ் அரசியற் கைதிகள் சிங்களக் கைதிகளினால் வெட்டிக் கொல்லப்பட்டனர்.

வரலாற்றில் இன்று

டிசம்பர்  11
1789 - ஐக்கிய அமெரிக்காவின் மிகப் பழமையான பொதுப் பல்கலைக்கழகம் வட கரொலைனா பல்கலைக்கழகம் (சாப்பல் ஹில்) அமைக்கப்படட்து.

1792 - பிரெஞ்சுப் புரட்சி: பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் நாட்டுத்துரோகக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டான்.

1816 - இந்தியானா ஐக்கிய அமெரிக்காவின் 19வது மாநிலமானது.

1907 - நியூசிலாந்தின் நாடாளுமன்றக் கட்டடம் தீயில் எரிந்து சாம்பரானது. 

1917 - பிரித்தானியப் படைகள் ஓட்டோமான் பேரரசிடம் இருந்து ஜெருசலேமை மீட்டன.

1927 - சீனாவின் குவாங்சூ நகரை கம்யூனிஸ்டுகள் கைப்பற்றி அதனை குவாங்சூ சோவியத் என மாற்றியிருப்பதாக அறிவித்தனர்.

1931 - ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து, நியூசிலாந்து, மற்றும் தென்னாபிரிக்கா ஆகியவற்றுக்கு தமது முழுமையான அரசியலமைப்புகளைப் பேணும் சட்டமூலம் வெஸ்ட்மின்ஸ்டர் சட்டம் 1931 பிரித்தானிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டது.

1936 - ஐக்கிய இராச்சியத்தின் மன்னன் எட்டாம் எட்வேர்ட் முடி துறந்தான்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜேர்மனியும் இத்தாலியும் ஐக்கிய அமெரிக்காமீது போரை அறிவித்தன

1946 - UNICEF எனப்படும் ஐக்கிய நாட்டு நிறுவனத்தின் சிறுவர்கள் அவசர நிதி அமைப்பு நிறுவப்பட்டது

1957 - சிங்கப்பூரின் புதிய கவர்னராக Sir William Goode நியமிக்கப்பட்டார்.

1958 - அப்பர் வோல்ட்டா பிரான்சிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.

1964 - நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் சே குவேரா உரையாற்றினார். இவர் உரையாற்றிக் கொண்டிருந்தபோது ஐநா கட்டடத்தின் மீது குண்டுத் தாக்குதல் இடம்பெற்றது.

1972 - அப்பல்லோ 17 சந்திரனில் இறங்கியது.

1981 - எல் சல்வடோரில் இராணுவத்தினர் நாட்டின் உள்நாட்டுப் போரின் ஒரு கட்டமாக கிட்டத்தட்ட 900 பொதுமக்களை கொன்றனர்.

1981 - ஐக்கிய நாட்டுச் சபையின் பொதுச் செயலாளராகப் பதவியேற்றார் பெருவின் Perez De Cuellar.

1988 - முதல் போட்டியிலேயே 100 ஓட்டங்கள் எடுத்து சாதனை படைத்தார் டெண்டுல்கர்

எந்த மருத்துவத்திலும் இல்லாத ஒன்று .....

அக்குபஞ்சர் சிகிச்சையில் நோய் மட்டும் குணமாக்கப்படுவதில்லை. மிகமிக முக்கியமான ஒன்று அக்குபஞ்சரில் அதிகம் அமைந்துள்ளது. மற்ற எந்த மருத்துவத்திலும் இல்லாத ஒன்று இந்த அக்குபஞ்சரில் அமைந்துள்ளது. அதை கூறுவதற்க்கு முன் சில விஷயங்களை சொல்லிவிட்டு வருகிறேன்.

நோய் வருமுன் காக்க வேண்டும் என்று சிலர் பாதுகாக்கின்றோம். அதையும் தாண்டி சில நோய்கள் வந்துவிடுகின்றன. அதுவும் சரி ஏற்றுக்கொள்ளக் கூடியதே, ஏன்னென்றால் இது இயற்கையான சில விஷயங்கள் ஆகும். ஆனால், பிறக்கும் குழந்தைகளுக்கு கூட பிறக்கும் போதே நோய்களுடன் பிறக்கின்றன. சில நோய்கள் நமக்கே தெரியாமல் நம்மை கஷ்டப்படுத்துகிறது ஏன்? என்ன காரணம்? எந்த தவறும் செய்யாத பிறந்த குழந்தைக்கு ஏன் இந்த தண்டனை? இது எல்லோருக்கும் இருக்கும் கேள்வி ஆகும்

அது தான் "கர்மவினை" ஆகும். அது என்ன கர்மவினை?. கர்மவினை என்றால் பல பிறவிகளில் செய்த பாவங்கள் தான் இந்த பிறவிகளில் கஷ்டங்களாக வெளிப்படுகின்றன. அதை யாரலும் தடுக்க முடியாது. ஆனால் கர்மவினை முடிந்தவுடன் தானாகவே அதற்கான விடைகள் கிடைத்து நோய்கள் சரியாகிவிடும். அதுவரை நம்மை படுத்திவிடும்.

(பல பிறவிகளில் செய்த பாவங்கள் தான் இந்த பிறவிகளில் கஷ்டங்களாக வெளிப்படுமா? அது எப்படி? என்று கேட்பவர்கள் பின்னூட்டம் இடுங்கள் விடை தருகிறேன். ஏனென்றால் அது பற்றி பேச ஆரம்பித்தால் அதற்க்காக தனி Blog- எழுதவேண்டும்.)

இந்த கர்மவினைக்கும் அக்குபஞ்சருக்கும் என்ன சம்பந்தம் என்றால், முழுமையாக தீர்வு அக்குபஞ்சரில் மட்டும் தான் இருக்கின்றன்.

அது என்ன தீர்வு என்றால் கர்மவினையை அழிக்கும் புள்ளிகள் நம் அக்குபஞ்சரில் மட்டும் தான் உள்ளன.

கர்மவினைக்கான புள்ளிகளை போட்டுவிடும் போது பல பிறவிகளில் நாம் செய்த பாவங்கள் அழியும் என்பது மிக மிக உண்மையான விஷயம் ஆகும். பல நாட்கள் தூக்கம் இல்லாமல் கஷ்டப்பட்டவர்கள் கூட இந்த இடத்தில் ஊசிகளை போட்டு விட்டால், Depression குறைந்து தூக்கிவிடுவார்கள் மற்றும் நோய்களும் சரியாகிவிடும்.

இது எந்த மருத்துவத்திலும் கிடையாது. இந்த புள்ளிகளை கைகளால் தொடக்கூடாது. ஊசிகள் மட்டும் போட்டுக் கொள்ள வேண்டும்.

தொடர்ந்து ஒருவாரம் போட்டால் நிறைய வித்தியாசம் கிடைக்கும் என்பதில் ஐயமில்லை. எனவே இந்த மருத்துவத்துறை எனக்கு கிடைக்கக கூட நாம் பல பிறவிகளில் புண்ணியம் செய்து இருக்க வேண்டும் என்று சொல்லிக் கொள்ள பெருமைபடுகிறேன். இதை படிக்கும் ஒவ்வொருவருமே புண்ணியம் செய்தவர்கள் தான்.

தூங்கும் போது பழம், சாக்லேட் சாப்பிடாதீங்க!

இரவில் நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பவர்கள் சில உணவுகளை தவிர்க்கவேண்டும் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். கணட உணவுகளை சாப்பிடுவதன் மூலம் உறக்கம் தொலைந்துவிடும். ஜீரணமாகாத உணவு நெஞ்செரிச்சல்,வயிற்றுப் பொருமல் போன்றவற்றையும் ஏற்படுத்தி இரவு முழுவதும் தூங்கவிடாமல் செய்துவிடும் என்கின்றனர் நிபுணர்கள். எந்தமாதிரியான உணவுகளை சாப்பிடக்கூடாது என்று நிபுணர்கள் பட்டியலிட்டுள்ளனர் படியுங்களேன்.

பழங்கள் வேண்டாம்

இரவில் பழங்கள் சாப்பிடுவதனால் வாயுத்தொல்லை ஏற்படும் என்கின்றனர். பழங்களில் உள்ள அமிலங்கள் தொந்தரவுகளை ஏற்படுத்திவிடும். ஆரஞ்சு, திராட்சை, அன்னாசி, பெர்ரீ ஆகிய பழங்களை இரவு நேரத்தில் சாப்பிடுவதை விட பகல்நேரத்தில்தான் சாப்பிடவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள்.

பீட்ஸா தொடக்கூடாது

பீட்ஸா என்பது இரவு உணவுக்கு ஏற்றதல்ல. சாஸ், தக்காளி, சீஸ், மைதா போன்றவைகள் கலந்த இத்தாலிய உணவுவகையான பீட்ஸாவை இரவில் சாப்பிட்டால் அது எளிதில் ஜீரணமாகாது. இரவு நேரத்தில் உணவு ஜீரணமாகாத காரணத்தினால்தான் தொப்பை போடும் உடல் குண்டாகும் என்கின்றனர் நிபுணர்கள். அதேபோல் கான்ப்ளக்ஸ் போன்ற காலையில் டிபன் உணவுக்கு சாப்பிடுபவைகளை இரவில் சாப்பிடக்கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். தானியங்கள் நிறைந்த அந்த உணவுகளில் தேன் கலந்திருக்கும். அதேபோல் கார்போஹைட்ரேட் உணவுகளை சாப்பிட்டால் உடனே உறங்கப் போகக்கூடாது நடைப்பயிற்சியோ, ஓட்டப்பயிற்சியோ மேற்கொள்ளவேண்டும் இல்லையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்துவிடும்.

மாமிசஉணவுகள்

இரவுநேரங்களில் அதிக கொழுப்புள்ள மாமிச உணவுகளை உட்கொள்ளக்கூடாது என்பது நிபுணர்களின் அறிவுரையாகும். ரெட்மீட் சாப்பிடுவதன் மூலம் உடம்பில் அதிக கொழுப்பு சேர்ந்துவிடும். காலையில் சாப்பிடுதற்கு ஏற்ற அந்த உணவுகளை இரவில் சாப்பிடுவது உகந்ததல்ல. எனவே இரவில் மாமிசம் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள்.

சாக்லேட் கேண்டி

இரவில் படுக்கைக்குப் போகும்முன் அதிகம் கேண்டி சாப்பிடவேண்டாம். ஏனேனில் அதில் உள்ள சர்க்கரை அப்படியே ரத்தத்தில் கலக்க வாய்ப்புள்ளது. இதனால் இரவில் தூக்கமிழக்க நேரிடலாம்.

எனவே இரவு நேரத்தில் நிம்மதியான உறக்கம் வேண்டும் என்பவர்கள். உடல் குண்டாகாமல் டயட்டில் இருக்கவேண்டும் என்று நினைப்பவர்கள் மேற்கூறிய உணவுகளை இரவில் சாப்பிடுவதை தவிர்க்கவேண்டும் என்கின்றனர் நிபுணர்கள். முயற்சி செய்து பாருங்களேன். ஆழ்ந்த அமைதியான உறக்கம் உங்களுக்கு கிடைக்கும்.

சில பொது அறிவுத் தகவல்கள்

1.உலகிலேயே அதிகம் பேருக்கு இருக்கும் பெயர் "முஹம்மது"

2. ஆங்கில கீபோர்டில் ஒரே வரிசையில் அதிக எழுத்துக்கள் பயன்படுத்தப்படு­ம் ஒரு சொ
ல் "TYPEWRITER"

3. அதே போன்று இடது கையினால் மட்டும் டைப் செய்யப்படும்
நீண்ட வார்த்தை 'Stewardesses"

4. வானத்தை நிமிர்ந்து பார்க்க இயலாத ஒரே விலங்கு "பன்றி"

5. Sixth Sick Sheik's Sixth Sheep's Sick - இதுவே ஆங்கிலத்தில் மிகவும் கடினமான "Tongue Twister"

6. 111,111,111 ஐ திரும்ப 111,111,111 ஆல் (111,111,111 x 111,111,111) பெருக்கினால்
12,345,678,987,654,321 என்ற விந்தையான கூட்டுத்தொகை வரும்.

7. எப்போதும் கெட்டுப்போகாத ஒரே உணவு "தேன்"

8. தீப்பெட்டி கண்டுபிடிப்பதற் ­கு முன்பே சிகரெட் லைட்டர் கண்டுபிடிக்கப்ப ­ட்டது.

9. உலகில் மனிதர்கள் அதிகமாக இறப்பதற்கு காரணமாகும் விலங்கு - கொசு

10. தும்மும் போது 'நன்றாய் இரு" "இறைவனுக்கு நன்றி"என்றுசொல்லக் கேட்டிருப்போம். ­, ஆமாம் உண்மையில் தும்மும் போது இதயம் ஒரு 'மில்லி செகண்ட்' நிற்குதாம்

11. பூமியின் எடை 5,972,000,000,000,000,000,000 டன்கள்.

முற்றிலும் நகைச்சுவைக்காகவே மட்டும்...


டிசம்பர் 21ல உலகம் அழியப்போகுதுன்னு சொல்றாங்க.. 'அத்த பொண்ண correct பண்ணனும், IAS ஆகணும், அடையார்ல apartment வாங்கணும்'ன்னு நம்மளோட லட்சியம்லா நிறைவேராதேன்னு கவலை இருந்தாலும், உலகம் அழியரதுல நெறைய நல்லதும் இருக்கு...

காலைல எந்திருச்சு, குளிக்கும் போது முடி கொட்டுதேன்னு கவலை பட வேண்டியதில்ல.

10000 கிலோ மீட்டர் , 5 சர்வீஸ், 3 accident பாத்த நம்ம bike இன்னும் ஒரு figureஅ கூட சீட்ல ஏத்தாம virginஆ இருக்கேன்னு கவலை பட தேவ இல்ல.

உலகமே ஒன்னுக்கு அடிச்சிட்டு வந்து குப்புற படுத்து தூங்குற காலைல ஆறு மணிக்கு,morning shift போக தேவை இல்ல.

Officeல manager பண்ற மொக்க காமெடிக்கெல்லாம் சிரிக்க தேவ இல்ல.

Client பேசற englisha subtitle இல்லாம புரிஞ்சுக்க தேவ இல்ல.

TVya போட்டாலே வர்ற, 'Arun excello temple green ஓரகடம் வழங்கும் நாப்பத்தி அஞ்சு லட்ச ருபாய் மதிப்புள்ள double bed room flat' ங்கற sentencea திருப்பி திருப்பி கேக்க வேண்டியதில்ல.

கலா அக்கா, நமீதா மேடம், குஷ் அக்கா மூஞ்சிகள பாக்க வேண்டியதில்ல.

வர்ற Australia test seriesla 4-0ன்னு தோக்க தேவ இல்ல.
டோனி test match விளையாடற கொடுமையெல்லாம் பாக்க தேவை இல்ல. சச்சின் retired ஆக தேவை இல்ல, அத விட முக்கியமா சச்சின் recorda இனிமே எவனாலயும் முறியடிக்க முடியாது.

'ஒப்பற்ற ஓவியமே','ஒன்னுக்கடிக்கும் ஓய்யாரமே'ன்னு ஒன்னாவது படிக்கற ஒம்பதாவது வட்ட செயலாளர் பையனுக்கு வெக்கற cut outa பாக்க தேவ இல்ல.

'ஆத்தா உன்ன மன்னிப்பாளா? தாய்ப்பால் உனக்கு coca cola;' மாதிரி கவித்துவமான பாட்ட கேக்க தேவை இல்ல.

வருமகோட்ல வாழ்ற ஹீரோ.
எருமமாட்ல பொழப்பு நடத்தற heroine.
நடுரோட்ல accident ஆகி சாகர climaxன்னு நெஞ்ச நக்க ட்ரை பண்ற படங்கள பாக்க தேவ இல்ல.

ஒரு படம் ஓடிருச்சுன்னா ,
"3 நாள்ல 44 கோடி வசூல்;
4 நாள்ல 56 கோடி வசூல்;
2 nd டே மேட்னி showla சத்யம் தியேட்டர்ல 'puff ' வித்த காசு 'எந்திரன' விட அதிகம்......"
இப்படியெல்லாம் Vijay/Ajith fans Facebook Statusகல பாக்க தேவ இல்ல;

'DSLR' coupled with 'Adobe Photoshop' coupled with 'Multi vitamin milk protien skin cream' coupled with 'பக்கத்துல ஒரு அட்டு figure' -
இவ்வளவும் இருந்தும் சுமாரா இருக்கற பொண்ணுங்க Profile Picக்கு 125 பேர் லைக் போடறத பாத்து கடுப்பாக தேவ இல்ல....

கொஞ்ச சட்ட போட்ட பூனம் பண்டேக்கள் , மஞ்ச சட்ட போட்ட அரசியல் தலைவர்கள் , என்ன கேட்டாலும் சத்தம் போடுற Government office ஆண்டிக்கள், முக்கியமா இந்திய economists - இவனுங்க எவன் தொல்லையும் இனி இருக்காது....

இது எல்லார்த்துக்கும் மேல இந்தியால கொஞ்ச நாள்ல ஒரு நெலம வரும்
குடிக்கற தண்ணி லிட்டர் 50 ரூபாய்க்கு விக்கும்;
வெங்காயம் கிலோ 450 ரூபாய்க்கு விக்கும்;
பெட்ரோல் 250 ரூபாய்க்கு விக்கும்;
கட்டண கழிப்பிடத்துல 25 ரூபா கேப்பான்....
ஆனா நம்ம சம்பளம் மட்டும் Rs 16370 இருக்கும்.... அதுலயும் income tax, professional tax, company welfare fund, State welfare fundன்னு எதையாவது புடிப்பான்.....

ஆக , பேசாம பூமாதேவி வாய பொளக்கட்டும், நாமெல்லாம் உள்ள போவோம்;

உலகம் அழியட்டும்...!

Monday, December 10, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர்  10

மானுட உரிமை நாள்
1041 - பைசண்டைன் பேரரசி சோயி தனது வளர்ப்பு மகனை ஐந்தாம் மைக்கல் என்ற பெயரில் பேரரசனாக்கினாள்.

1541 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் மனைவியும் அரசியுமான கத்தரீனுடன் தகாத உறவு வைத்திருந்தமைக்காக தொமஸ் கல்பெப்பர்ம் பிரான்சிஸ் டெரெகம் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர்.

1655 - யாழ்ப்பாண ஆளுநர் "அன்டோனியோ டி மெனேசா" மன்னாரில் இருந்து கொழும்பு செல்லும் வழியில் முகத்துவாரம் என்னும் இடத்தில் சிறை பிடிக்கப்பட்டார்.

1684 - ஐசாக் நியூட்டன் தனது புவியீர்ப்பு விதிகளின் கொள்கைகளில் எழுதிய கெப்லரின் விதிகளின் தீர்வுகள் ரோயல் சபையில் படிக்கப்பட்டது.

1807 - சென்னையில் நிலநடுக்கம் எற்பட்டது.

1817 - மிசிசிப்பி ஐக்கிய அமெரிக்காவின் 20வது மாநிலமாக இணைந்தது.

1868 - உலகின் முதலாவது சமிக்கை விளக்குகள் லண்டனில் நாடாளுமன்றுக்கு வெளியே நிறுவப்பட்டது.

1898 - ஸ்பெயின்-அமெரிக்கா போர் நிறுத்த உடன்பாடு பாரிசில் கைச்சாத்திடப்பட்டது.

1901 - முதலாவது நோபல் பரிசுகள் வழங்கப்பட்டன.

1902 - அஸ்வான் அணை திறக்கப்பட்டது.

1902 - தாஸ்மேனியாவில் பெண்களுக்கு வாக்குரிமை வழக்கப்பட்டது.

1906 - அமெரிக்க அதிபர் தியொடோர் ரோசவெல்ட் அமைதிக்கான நோபல் பரிசைப் பெற்றார்.

இது ஒரு அமெரிக்கர் பெற்ற முதலாவது நோபல் பரிசாகும்.


1936 - இங்கிலாந்தின் எட்டாம் எட்வேர்ட் மன்னன் முடி துறப்பதாக அறிவித்தான்.

1941 - இரண்டாம் உலகப் போர்: மலாயாவுக்குக் கிட்டவாக ஐக்கிய இராச்சியத்தின் இரண்டு கடற்படைக் கப்பல்கள் ஜப்பானியர்களால் மூழ்கடிக்கப்பட்டது.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியப் படைகள் பிலிப்பீன்சை அடைந்தனர்.

1948 - மனித உரிமைகள் குறித்த அனைத்துலகப் பிரகடனத்தை ஐநா பொதுச் சபை அறிவித்தது. இந்நாள் உலக மனித உரிமைகள் நாள் ஆக அறிவிக்கப்பட்டது.

1973 - தமிழ்நாட்டில் முதன்முதலில் பெண் போலீஸ் படை அமைக்கப்பட்டது.

1975 - ரஷ்யரான அந்திரேய் சாகரொவ் அமைதிக்கான நோபல் பரிசு பெற்றார்.

1981 - தெற்காசியாவை அணுவாயுதமற்ற பகுதியாக அறிவிக்க பாகிஸ்தான் விடுத்த கோரிக்கையை ஐநா பொது அவை ஏற்றுக் கொண்டது.

1984 - தென்னாபிரிக்க கருப்பின மதகுரு டெஸ்மண்ட் டூட்டு சமாதானத்துக்கான நோபல் பரிசு பெற்றார்.

1989 - மங்கோலியா கம்யூனிசத்தில் இருந்து மக்களாட்சிக்கு அமைதியாக மாற்றம் பெற்றது.

சர்வதேச மனித உரிமைகள் தினம்.

தாய்லாந்து அரசியலமைப்பு தினம்.

நோபல் பரிசு வழங்கப்படும் தினம்.

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ராஜாஜி பிறந்த தினம்(1878).

ஸ்வீடன் கண்டுபிடிப்பாளர் ஆல்பிரட் நோபல் இறந்த தினம்(1896).

வரலாற்றில் இன்று

டிசம்பர்  9

ஐ.நா.சபை - அனைத்துலக ஊழல் எதிர்ப்பு நாள்
1582 (ஜூலியன், ஞாயிற்றுக்கிழமை) - பிரான்ஸ் அடுத்த நாளை திங்கட்கிழமை, டிசம்பர் 20 (கிரெகோரியன்) ஆக்கியது.

1793 - நியூயோர்க் நகரின் முதலாவது நாளிதழ் "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.

1856 - ஈரானிய நகரம் புஷேஹர் பிரித்தானிய ஆக்கிரமிப்புப் படைகளிடம் வீழ்ந்தது.

1868 - வில்லியம் கிளாட்ஸ்டோன் (William Gladstone) பிரிட்டனின் பிரதமராக முதன்
முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் நான்கு முறை பிரிட்டிஷ் பிரதமராக இருந்தார்.

1905 - பிரான்சில் அரசையும் கிறிஸ்தவ தேவாலயங்களையும் பிரிக்கும் சட்டமூலம் கொண்டுவரப்பட்டது.

1917 - பிரித்தானியர் பாலஸ்தீனத்தின் ஜெருசலேம் நகரைக் கைப்பற்றினர்.

1922 - போலந்தின் முதலாவது அதிபராக "கப்ரியேல் நருட்டோவிச்" தெரிவு செய்யப்பட்டார்.

1937 - ஜப்பானியப் படைகள் சீன நகரான நான்ஜிங்கைத் தாக்கின.

1940 - இரண்டாம் உலகப் போர்: பிரித்தானிய, மற்றும் இந்தியப் படைகள் இத்தாலியப் படையினரை எகிப்தில் தாக்கினர்.

1946 - இந்திய சட்டசபை ராஜேந்திர பிரசாத் தலைமையில் அமைக்கப்பட்டது.

1953 - ஜெனரல் எலெக்ட்றிக் நிறுவனம் தனது நிறுவனத்தில் பணியாற்றிய கம்யூனிஸ்ட்கள் அனைவரையும் பணிநீக்கம் செய்தது.

1961 - பிரித்தானியாவிடம் இருந்து தங்கனீக்கா விடுதலை பெற்றது.

1963 - CCC எனப்படும் குடிமக்கள் ஆலோசனைக் குழுக்கள் முதன் முதலில் சிங்கப்பூரில் அறிமுகம் கண்டன
1979 - பெரியம்மை நோய் முற்றாக அழிக்கப்பட்டு விட்டதாக உலக சுகாதார அமைப்பு அறிவித்தது. மனித உயிர் கொல்லி நோயொன்று முற்றாக அழிக்கப்பட்டது இதுவே முதலாவதாகும்.

1984 - தமிழக மக்கள் விடுதலை இயக்கம் துவக்கம்
1986 - இந்தியைத் திணிக்கும் அரசியல் சட்ட நகலை எரித்ததற்காக தி.மு.க. தலைவர் மு. கருணாநிதி உள்ளிட்ட 10 தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டனர்.

1990 - லெக் வலேசா போலந்தின் முதலாவது மக்களால் தெரிவு செய்யப்பட்ட அதிபரானார்.

1992 - வேல்ஸ் இளவரசர் சார்ள்ஸ், இளவரசி டயானா இருவரினதும் பிரிவினை அறிவிக்கப்பட்டது.

Sunday, December 9, 2012

வரலாற்றில் இன்று

டிசம்பர் 8

மனநிலை குறைபாடுடையோர் நாள்.

1609 - இத்தாலியின் மிலான் நகரில் அம்புரோரியானோ நூலகம் திறக்கப்பட்டது. இதுவே ஐரோப்பாவின் இரண்டாவது பொது நூலகம் ஆகும்

1864 - இங்கிலாந்தில் கிளிஃப்டன் தொங்கு பாலம் திறக்கப்பட்டது.

1877 - நியூசிலத்தின் முதல் பெண் பிரதமராகப் பொறுப்பேற்றார் திருமதி Jenny Shipley.

1912 - அல்பேனியாவின் "கோர்சே" நகரை ஓட்டோமான் படையிடம் இருந்து கிரேக்கர்கள் கைப்பற்றினர்.

1941 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானியர்கள் ஹொங்கொங், மலாயா ஆகியவற்றைத் தாக்கினர்.

1941 - பசிபிக் போர்: பேர்ள் துறைமுகத்தை ஜப்பான் தாக்கியதை அடுத்து ஐக்கிய அமெரிக்கா ஜப்பான் மீது போரை அறிவித்தது.

1941 - ஜப்பானியர்கள் சிங்கப்பூரை குண்டு வீசித் தாக்கத் தொடங்கினர்.

1941 - பசிபிக் போர்: சீனக் குடியரசு ஜப்பான் மீது போரை அறிவித்தது.

1941 - பெரும் இன அழிப்பு: போலந்தின் லோட்ச் என்ற இடத்தில் யூதர்களைக் கொல்லுவதற்கு நாசிகள் முதன் முதலாக நச்சு வாயுப் பேருந்தைப் பயன்படுத்தினர்.

1942 - பெரும் இன அழிப்பு: உக்ரைனின் "டேர்னோப்பில்" என்ற இடத்தில் நாசி ஜெர்மனியர் அங்கிருந்த 1,400 ப்பெரடங்கிய கடைசித் தொகுதி யூதர்களை பெல்செக் வதை முகாமிற்கு அனுப்பினர்.

1949 - சீனக் குடியரசின் தலைநகர் நான்சிங்கில் இருந்து தாய்பெய் நகருக்கு மாற்றப்பட்டது.

1953 - அணு அமைதிக்கே என்று அமெரிக்க அதிபர் டுவைட் டி. ஐசனாவர் அறிவித்தார்.

1985 - சார்க் அமைப்பு இந்தியா, பாகிஸ்தான், வங்காள தேசம், இலங்கை, நேபாளம், மாலைதீவு மற்றும் பூட்டான் ஆகிய நாடுகளினால் உருவாக்கப்பட்டது.

1987 - பெருவின் தலைநகர் லீமாவுக்கருகில் சென்று கொண்டிருந்த விமானம் கடலில் வீழ்ந்து மூழ்கியதில் அதில் பயணஞ்செய்த பெருவின் உதைபந்தாட்ட அணியொன்றின் அனைத்து வீரர்களும் கொல்லப்பட்டனர்.

1991 - சோவியத் ஒன்றியத்தைக் கலைப்பதென ரஷ்யா, பெலாரஸ், உக்ரேன் ஆகிய நாடுகளின் தலைவர்கள் கூடி முடிவெடுத்தனர்.