Digital Time and Date

Welcome Note

Sunday, April 20, 2014

அண்ண கொஞ்சம் இத படீங்கன

யாரை ஊடகம் அலை அலை என்று சொல்கிறதோ அவருக்கு தேர்தல் பயத்தால் பேதி அலைதான் உள்ளது

1)2002 இல் 45301 கோடியாக இருந்த குஜராத் அரசின் கடன் தொகை 2013 இல் 138978 கோடியாக உள்ளதுதான் குஜராத் இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

2)மஹூவாவில் சிமென்ட் ஆலையே அமைப்பதற்கு 4000 ஹெக்டர் விவசாய நிலங்களை நிர்மாவுக்கு மோடி விவசாய எதிர்ப்பையும் மீறி வழங்கினாரே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

3)குஜராத்தில் 31.8 சதிவிகிதம் ஏழைகள் இருக்கிறார்கள் என்று திட்டகமிஷன் கூறுகிறதே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

4)1990 முதல் 2010 வரை மற்ற மாநிலங்களை விட குஜராத் அரசு செலவழித்த தொகை மிக மிக குறைவு என்று புள்ளி விவரம் தெரிவிக்கிறது இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

5)குஜராத்தில் 65 சதவிகித கிராம மக்களுக்கு கழிப்பிடங்கள் இல்லாததால்,பொது இடத்தில் மலஜலம் கழிப்பதால் மஞ்சக்காமாலை வயிற்றுப்போக்கு,மலேரியா போன்ற நோய்களால் மக்கள் அவதிப்படுகிறார்கள் என்று புள்ளிவிவரம் கூறுகிறதே இதைதான் இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

6)குஜராத்தில் இரண்டுவேளை உணவுக்கு லாட்டரி அடிக்கிறார்கள்.ஊட்டச்சத்து குறைப்பாடும்,குறைவான கூலியும், பாதுகாப்பற்ற குடிநீரும் மக்களை கடும் வாழ்வாதார நெருக்கடியில் தள்ளி இருக்கிறது என்று ஏழை பற்றிய திட்டகமீஷனி ன் உலக புகழ்பெற்ற வரையறை கூரிகிறதே இதைதான் குஜராத் வளர்ச்சி இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

7)ஏழை மக்கள் இருந்தும் அதானி,அம்பானிகள்,எஸ்ஸார்,ஸ்டீல் குழுமங்களுக்கு குஜராத் மாநிலத்தின் நிதி தொடர்ந்து சென்றுகொண்டு இருக்கிறதே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

8)தங்களின் வாழ்வாதாரங்களின் சூழ்நிலைகளை சொல்வதற்காக பெண்கள் குழந்தைகள் என்று 5000 மக்கள் காந்தி நகருக்கு 350 கிலோமீட்டர் தூரம் பாதயாத்திரை சென்று மோடியிடம் முறையிட்டார்கலே காதில் வாங்காமல் அவர்களுக்கு சொந்தமான ஹெக்டார் இடங்களை கார்ப்போரேட்களுக்கு வாங்கி கொடுத்தாரே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

9)வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளும்,கூலி தொழிலாளர்களும் மோடி ஆட்சிகாலத்தில் மட்டும் 16000 பேர் தற்கொலை செய்து கொண்டார்களே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

10)மக்களை விட கார்ப்போரேட்களுக்கு சேவை செய்யும் மோடிக்கு அதானி தனக்கு சொந்தமான பல விமானங்களில் ஒன்றை பிரச்சாரத்திற்கு கொடுத்து உள்ளாரே இதைத்தான் அலை அலை என்கிறார்களோ?

-Editor Alaudeen

No comments:

Post a Comment